இத்தாலியில்‌ வெனிஸ் நகரின் சிறப்புகள் | The Floating City - Venice.

வெனிஸ் உலக அழகிய சுற்றுலா தலம் மேலும் , காதலர்கள் மற்றும் புதுமண தம்பதியர் அதிகம் விரும்பும் ஒரு இடம் இதன் சிறப்புகள், அதன் கால்வாயின் நடுவில் அமைந்துள்ள வெனிஸ் நகரம் தான்.


வடிவமைத்த கதை:

கால்வாய்களில் நகரம், அல்லது மிதக்கும் நகரம் என்ற பெயரில் அழைக்கப்படும் வெனிஸ் நகரம், இத்தாலியின் மிக அழகிய நகரமாகும்.வெனிஸ் நகரில் இருக்கும் கால்வாய்கள், அதில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இத்தாலி நாட்டின் கலை நுட்பத்தை பறை சாட்டுகின்றன.

இந்த அழகிய நகரம் முதலில் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது சுமார் 124 தீவுகளை உள்ளக்கடிய நகரம் இது .அப்படி ஒரு சதுப்பு நிலத்தை எப்படி இவர்கள் உலகம் வியக்கும் அழகிய நகரமாக மாற்றினார் வாருங்கள் பார்ப்போம்.

La Dominante-La Serenissima-Queen of the Adriatic-venice

வெனிஸ் மனிதர்கள் வாழ வீடுகள், கால்வாய்கள் , மற்றும் பாலங்கள் அமைக்க முதலில் நீரை வடிகட்ட வேண்டும். பிறகு உப்புநீர் கால்வாய் அமைக்க வேண்டும் பிறகு அதன் கறைகளை பலப்படுத்தி அதன் மேல் வீட்டு கட்டுமானங்களை வடிவமைக்க வேண்டும்.

முதலில் அவர்கள் கால்வாயை தோண்ட ஆரம்பித்தனர் பிறகு அதன் கரையில் நீரால் பாதிப்பு அடையாத மர தடுப்புகளை போட்டனர். இவை கீழே உள்ள மணல்களின் ஊடே போய் கீழே உள்ள கடினமான களி மண் தரையில் அழுந்த பதியுமாறு வைத்தனர், பிறகு மேலே மர பலகைகள் வைத்து அதன் மேல் கற்களை வைத்து வீடுகளை எழுப்பினர். இவ்வாறு வெனிஸ் நகரத்தின் வீடுகள் வடிவமைக்கப்பட்டன.

இந்த உப்பங்கழி காடுகள் இல்லாததால் இங்கு பாலம் அமைக்கவும் வீடு கட்டவும் மொன்டெரோகோ , ஸ்லோவேனியா மற்றும் CROATIA போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன . மேலும் இந்த மரங்கள் நீர் மற்றும் மண் அரிப்புகளால் கட்டடம் மற்றும் , பாலங்கள் பாதிக்கா வண்ணம் அமையப்பெற்றுள்ளது மிக அதிசியம்.

இதில் அறிவியலும் பங்கு வகிக்கிறது இந்த நீரில் ஆகிசிஜன் அளவு மிக குறைவு ஆதலின் நுண்ணியிரிகள் வாழ்வது அரிது. ஆதலின் இவைகள் மரங்களை அரிப்பதில்லை. மேலும் நீரில் அமிழ்க்கப்பட்ட மரங்கள் நாளடைவில் இறுகி கற்கள் போல் ஆனதும் ஒரு காரணமாக உள்ளது.இதற்க்கு காரணம் உப்பு நீரில் உள்ள தாதுக்கள் . ஆகையால் இவை காலம் சென்றும் இன்றும் எந்த ஒரு பாதிப்பு இல்லாமல் நிலைத்து நிற்கிறது.

வெனிஸ் கால்வாயின் ஆழம் பொதுவாக 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் ஆழம் வரை இருப்பதாக கருதப்படுகிறது. மிகப்பெரிய கிராண்ட் கால்வாய் 5 மீட்டர் ஆழமும் ,கியூடெக்கா கால்வாய் அதிக படியான ஆழம் கொண்டது இது 12 - 17 மீட்டர் ஆழம் கொண்டது.

சுவரசியம் நிறைந்த தகவல்கள்:

• வெனிஸில் மொத்தம் 417 மிதக்கும் பாலங்கள் உள்ளன இதில் சுமார் 72 தனியாருக்கு சொந்தமானவை.

• இங்குள்ள அனைத்து வீடுகளும் எண்களை கொண்டு வகைப்படுத்தியுள்ளனர்.

• வெனிஸில் மொத்தம் 177 கால்வாய்கள் உள்ளன . இதில் ஆங்கில எழுத்து ஸ் வடிவில் இருக்கும் கிராண்ட் கால்வாய் பெரியது இது வெனிஸ் நகரை இரண்டாக பிரிக்கிறது.

• ஆய்வின்படி வெனிஸ் நகரம் ஆண்டொன்றுக்கு சுமார் 1- 2 மில்லிமீட்டர் நீரில் முழுகுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

• கடந்த 50 ஆண்டுகளில் வெனிஸ் நகரம் 1,20,000 மக்கள் தொகையில் இருந்து இப்பொழுது வெறும் 60,0000 மக்கள் மட்டும் வசிக்கும் நகரமாக மாறியுள்ளது.