பிரமிடுகள் பற்றிய தகவல்கள் | Egyptian Pyramids Details In Tamil.

நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பிரமிடுகள் பழங்கால எகிப்தியர்களின் அடையாளமாக திகழ்கின்றன. அதிலும் முக்கியமாக கிசா பிரமிடானது கட்டப்பட்டு ஆயிரம் வருடங்களாகியும் நிலைத்து நிற்கின்றது. இது எகிப்தியர்களின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலை அறிவினையும் பறைசாற்றுகின்றது. எகிப்தினர்கள், தங்களின் அரசர்கள் அவர்களையும் கடவுளையும் இணைக்கிறவர்ளாக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கையை உடையவர்கள். 

மேலும் எகிப்தில் ஒவ்வொரு நபரும் புமியில் பிறக்கும் பொழுது சொர்கத்திலும் அவர்கள் பிறக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உடையவர்கள். எனவே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பிரமிடுகளுக்குள் அரசரின் உடலினோடு சேர்த்து வைத்துவிடுவர்
பிரமிடுகளின் நான்கு முகங்கள் சற்று குழியானதாக இருக்கும்.

மிகப்பெரிய கிசா பிரமிடு: 

பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிட் ஆனது கிசா பிரமிடு. 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள் ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலைநகர் கெய்ரோவின் புறப்பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலகப் புகழ்பெற்றவை. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் பிரமிடுகள் மிக விந்தையான மற்றும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடயங்களை உள்ளடக்கியது.

ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறைக் கற்களால் எழுப்பப்பட்டது. இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர்.

பிரமிடு சுண்ணாம்பு கற்கள்: 

சுண்ணாம்புக் கற்களின் மேல் அடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறமாகப் பதிக்கப்பட்டுள்ளன. 23 லட்சம் சுண்ணாம்புக் கற்கள் எவ்வாறு அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பதும், இத்தகைய பாலைவனப் பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.

புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மட்டும் பதித்தாள் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து. இதில் உள்ள மூன்று பிரமிடுகளும் பித்தாகரஸ் (pythagoras) என்கிற கணித விதிகளின் படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரிணை நட்சத்திரங்களைக் கூறுகின்ற துல்லிய கோட்பாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இன்னும் முற்றிலுமாக பயன்பாடுகள் கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் பற்றியும், குறுக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன்பாடுகள் பற்றியும் கண்டறிய இயலாதது, அதனை மர்மம் எனும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

2004-ம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ள ரோபோக்களை உட்செலுத்தி உலகம் முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது, உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு உலகம் வியந்தது. இது இன்னும் ஆராய்ச்சியாளர்களிடையே இதனை ஆராய வேண்டும் என்னும் எண்ணத்தை வலுப்படுத்தியது. ஏராளமான மக்கள் இந்த மர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.

எகிப்திய நாகரிகத்தின் உருவாக்கத்தில் நைல் நதி பங்கு: 

நைல் நதி இல்லாமல், எகிப்து ஒருபோதும் வரலாற்றில் மிக முக்கியமான நாகரிகங்களில் ஒன்றாக மாறியிருக்காது. பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில், நைல் ஒரு உடல் இருப்பை விட அதிகமாக இருந்தது, இது ஒரு அரசியல் மற்றும் ஆன்மீக ஒன்றாகும்.பண்டைய எகிப்தியர்களைப் பொறுத்தவரை, இந்த நதி ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது (ஒருவிதமான சொல்) அவர்கள் தண்ணீரை மிக முக்கியமான தங்கள் உடலில் உறுப்பாக ஏன் உயிறாக பார்த்திருக்கிறார்கள்.

நைல் நதிக்கு அருகில் எகிப்திய பிரமிடுகள்: 

எகிப்தின் பிரமிடுகள் உலகின் மிகப்பெரிய தொல்பொருள் பொக்கிஷங்களில் ஒன்றாகும்; பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.பண்டைய எகிப்தியர்கள் தங்களுடைய மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பிரமிடுகளை கட்டினர், பல சமயங்களில் மன்னர்களை அடக்கம் செய்வதற்கும் தங்கள் அரசர்களாக பாரோக்களுக்கும் மற்றும் பிற அரசியல் உயர்ந்தவர்களுக்கும் பிரமிடுகளை கட்டினர்.

எகிப்து பிரமிடின் யாரும் அறியாத சில உண்மைகள்:

எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும் பிரமிட் கும்பங்களும் ஒரு புதிரான வரை கணித (hermetic geometry) முறையில் திட்டமிட்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அந்தக் கணித நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர்கள் சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத் தான் புராதான அலெக்சாண்டர், கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறியப்படுகிறது.


• கிசாவின் பெரிய பிரமிடை, உலகின் மிகப் பெரிய மற்றும் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பமான கிசாவின் பெரிய ஸ்பிங்ஸ் (Sphinx) காத்து வருகின்றன.

• பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக, பிரமிடுகள் அடிமைகள் அல்லது கைதிகளால் கட்டப்படவில்லை. ஆனால் வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களால் கட்டப்பட்டது.

• 130க்கும் மேற்பட்ட பிரமிடுகள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

• 3800 ஆண்டுகளுக்கும் மேலாக, கிசாவின் பெரிய பிரமிட் உலகில் மனிதரால் கட்டமைக்கப்பட்ட உயரமான அமைப்பாகும்.

• அனைத்து எகிப்திய பிரமிடுகளும் நைல் நதியின் மேற்கு கரையில் கட்டப்பட்டுள்ளது.

• எகிப்திய பிரமிடுகளின் உள்ளே, வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

மிகப்பெரிய பிரமிடு :

ஸ்னெஃபெருவிற்கு அடுத்ததாக அரசர் குஃபு ( 2589 – 2566 கி.மு ) கிசாவில் மிகப் பெரிய பிரமிடினைக் கற்களால் கட்டினார். அதன் உயரம் 479 அடி, அகலம் 754 அடி மற்றும் 2,300,000 கற்களின் தொகுதிகளை உடையது. அந்த கற்களின் இடை 2 மற்றும் ¾ டன்களை உடையது.ஒரு சில தொகுதுகள் 16 டன் இடையுடையதாக இருக்கும்.

குஃபு அரசரின் காலம் 23 வருடங்களை உள்ளடக்கியது. எனவே ஒரு வருடத்திற்கு 100,000 தொகுதிகள் ஒரு நாளைக்கு சுமார் 285 தொகுதிக் கற்கள் கட்டமைக்கப்படிருக்கும். இந்த கட்டிடம் குறையின்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஓரங்கள் சரியாக 90 டிகிரி கோனத்தில் இருக்கும். இது பழங்கால அதிசயங்களில் ஒன்றாகும்.

எவ்வாறு மம்மிகள் உருவாக்கப்படுகின்றன:

இதோ உங்களுக்காக எவ்வாறு மம்மிகள் உருவாக்கப்படுகின்றன என்ற ஒரு சிறிய செய்முறையை, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்காக மட்டும் கூறுகிறேன்.

இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் இறந்தவரை குளிப்பாட்டுவார்கள்.
உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பர்.
நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால், அது உடலுக்குள்ளேயே வைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு, உடைத்து மூளையை எடுத்துவிடுவார்கள்.
உடல் கல் உப்பால் மூடப்படும்
நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி அதன்மீது வாசனை எண்ணெய்களை தடவுவார்கள்.
உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும் உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில்( canopic jars)வைக்கப்படும்.

உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள் தலை கைகள் கால்கள் உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.பின்னர் மம்மியை அடக்கம் செய்வர். உள்ளே வைக்கப்பட்டுள்ள உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் விந்தை தான் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலைக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.